
மருத்துவமனை மீதான சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்ட கந்தசாமி தருமகுலசிங்கம், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர்.
இதன்போது மருத்துவமனையின் நிருவாக அலுவலர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக கடந்த 8ஆம் நாள் முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை பற்றி புலம்பெயர் மக்களுக்கு காணாளி வழியாக தகவல்களை வழங்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment